உங்களுடைய பராமரிப்பு அணியினருடன் எப்போது தொடர்புகொள்வது?
உங்களுடைய பராமரிப்பு அணியினர்நீங்கள் ஸ்கேன் செய்த QR குறியீட்டிலிருந்து
பின் வரும் எச்சரிக்கை அறிகுறிகள் தோன்றியுள்ளனவா என்று அவதானிக்குமாறு உங்களுடைய சுகாதாரப் பராமரிப்பு அணியினர் உங்களை வேண்டுகின்றனர். இந்த அறிகுறிகளில் ஏதும் உங்களுக்கோ, நீங்கள் பராமரித்துவரும் நபருக்கோ தோன்றியிருந்தால், உங்களுடைய மருத்துவமனை, ‘க்ளினிக்’ அலது மருத்துவரை உடனடியாக அழையுங்கள்.
இவற்றில் ஏதேனும் ஒன்றை நீங்கள் அவதானிக்கிறீர்களா?
- தொள-தொளப்பு அல்லது ஈரம் கட்டுகள் தொள-தொளப்பாகவோ, விளிம்புகளின் அடியில் இருந்து திரவக் கசிவோ இருக்கும்.
- வலி அல்லது சிவந்த நிறம் கட்டைச் சுற்றியுள்ள தோலில் வலி இருக்கும், சிவப்பாக அல்லது வீக்கமாக இருக்கும்.
- காய்ச்சல் அல்லது குளிர்ச்சுரம் உங்களுக்குக் காய்ச்சல், வியர்த்தல் அல்லது திடீரென ஏற்படும் குளிர் ஆகியன இருக்கும்.
- குழப்பம் அல்லது கிறக்கம் குழப்பமாக, தலைச் சுற்றலாக அல்லது அசாதாரணமாக இருப்பது போல இருக்கும்.
இன்று பல் துலக்கினீர்களா?
நியூமோனியா வராமல் தடுக்க நீங்கள் செய்யக்கூடிய மிகச் சிறந்த விடயம் பல் துலக்குவதே. மருத்துவமனையில் இருக்கும் ஒவ்வொரு நோயாளருக்கும் நியூமோனியா ஏற்படும் ஆபத்து உண்மையாகவே உள்ளது. இதைத் தடுப்பது உங்கள் கையிலேயே உள்ளது.
காலையிலும் இரவிலும், நாளுக்கு இரண்டு முறை பல் துலக்குங்கள்.
பற்தூரிகை வேண்டுமா, அல்லது பல் துலக்க உதவி தேவையா? உங்கள் செவிலியிடம் கேளுங்கள்.
பல் துலக்க நினைவூட்டல்களை அமையுங்கள்
“Hey Siri” அல்லது “Hey Google” என்று சொல்லி, பின்னர்:
“ஒவ்வொரு நாளும் காலை 8 மணிக்குப் பல் துலக்க எனக்கு நினைவூட்டு.”
பின்னர் இரவு 8 மணிக்கும் அதையே மீண்டும் சொல்லுங்கள்.
உங்கள் தொலைபேசிக்கு இது புரியவில்லை என்றால், ஆங்கிலத்தில் இப்படிச் சொல்லுங்கள்:
“Remind me every day at 8 am to brush my teeth.”
அல்லது உங்கள் தொலைபேசியின் கடிகாரம் (Clock) செயலியில் தினசரி அலாரத்தை நீங்களே அமையுங்கள்.
நீங்கள் உறுதியாக நிற்க முடிகிறதா?
மருத்துவமனையில் உள்ள ஒவ்வொரு நோயாளிக்கும் கீழே விழுவது உண்மையான ஆபத்து. மருந்துகள், நோய், குழாய்கள், பழக்கமில்லாத அறை ஆகியவை உங்களைத் தடுமாறச் செய்யலாம். இதைத் தடுக்க நீங்கள் உதவலாம்.
- உங்களுக்கு அப்படிச் சொல்லப்பட்டிருந்தால், அல்லது தலைச்சுற்றல் அல்லது பலவீனமாக உணர்ந்தால், எழுவதற்கு முன் உங்கள் செவிலியை அழையுங்கள்.
- கழிவறைக்கு அவசரமாகச் செல்லாதீர்கள். முன்கூட்டியே உதவி கேளுங்கள்.
- வழுக்காத காலணிகளை அணியுங்கள், உங்கள் கண்ணாடியையும் அழைப்பு மணியையும் கைக்கு எட்டும் இடத்தில் வையுங்கள்.
தனியாக எழலாமா என்று உறுதியில்லையா? உங்கள் செவிலியிடம் கேளுங்கள்.
தினமும் சரிபாருங்கள்
நாளுக்கு ஒரு முறையாவது உங்கள் கட்டைப் பார்த்து, எச்சரிக்கை அறிகுறிகளை மீண்டும் ஒருமுறை சரிபாருங்கள்.
தினசரி நினைவூட்டலை அமையுங்கள்
“Hey Siri” அல்லது “Hey Google” என்று சொல்லி, பின்னர்:
“ஒவ்வொரு நாளும் காலை 9 மணிக்கு எச்சரிக்கை அறிகுறிகளைச் சரிபார்க்க எனக்கு நினைவூட்டு.”
உங்கள் தொலைபேசிக்கு இது புரியவில்லை என்றால், ஆங்கிலத்தில் இப்படிச் சொல்லுங்கள்:
“Remind me every day at 9 am to check for warning signs.”
அல்லது உங்கள் தொலைபேசியின் கடிகாரம் (Clock) செயலியில் தினசரி அலாரத்தை நீங்களே அமையுங்கள்.
வீட்டுக்கும் வைத்துக்கொள்ளுங்கள்
இந்தப் பக்கத்தை மீண்டும் பார்க்க, இதை உங்கள் தொலைபேசியில் சேமித்துக்கொள்ளுங்கள்.
உங்கள் பராமரிப்பு அணியினரைத் தொடர்புகொள்ளுங்கள்
மருத்துவமனையில் இருக்கிறீர்களா?
அழைப்பு மணியை அழுத்துங்கள், அல்லது உங்கள் செவிலியிடம் சொல்லுங்கள்.
ஆலோசனைக்கு அழையுங்கள்
உங்கள் மருத்துவமனை, ‘க்ளினிக்’ அல்லது மருத்துவரை அழையுங்கள். அவர்கள் உங்களுக்குத் தந்த இலக்கத்தைப் பயன்படுத்துங்கள்.
யாரும் பதிலளிக்காவிட்டால், அவசியமானதும் பொருத்தமானதும் என நீங்கள் கருதினால், உங்கள் பகுதிக்கான சுகாதாரச் சேவையை அல்லது அவசர இலக்கத்தைத் தொடர்புகொள்வது பற்றிச் சிந்திக்கலாம்.
முக்கியத் தகவல்
வழிகாட்டல்களை மட்டுமே ‘டைமர்-டேக்’ (Timertag) பக்கங்கள் உங்களுக்குத் தருகின்றன, ஆகவே உங்களுடைய சுகாதாரப் பராமரிப்பு அணியினர் அளிக்கும் அறிவுரைக்கு மாற்றாக இது அமையாது. உங்களுடைய சிகிச்சைக்கு உங்களுடைய ‘க்ளினிக்’ அல்லது மருத்துவமனையே தொடர்ந்து பொறுப்பாக இருக்கும். உங்களுக்கு சுகவீனமாக இருப்பது போல இருந்தால் உங்களுடைய செவிலி அல்லது மருத்துவருடன் உடனடியாகத் தொடர்புகொள்ளுங்கள்.
உங்களது அந்தரங்கத்தன்மை
நபர் ஒருவரைப் பற்றிய தகவல்களையோ, சுகாதாரப் பதிவுகளையோ ‘டைமர்-டேக்’ திரட்டுவதில்லை. உங்களை யாரும் பின்தொடர்வதில்லை, நீங்கள் கணக்கு எதுவும் உருவாக்கத் தேவையில்லை.
Free from Timertag · timertag.com