Bedside Guide தமிழ்

உங்களுக்கு இவற்றில் எவை உள்ளன?

பொருந்தும் அனைத்தையும் தெரிவுசெய்யுங்கள். ஒவ்வொன்றுக்கும் எவற்றைக் கவனிக்க வேண்டும் என்று நாம் காட்டுவோம்.

உங்களுக்கு எவை உள்ளன என்று உறுதியாகத் தெரியவில்லையா? உங்கள் செவிலியிடம் கேளுங்கள்.

உங்கள் IV குழாய்

இவற்றில் ஏதேனும் ஒன்றை நீங்கள் அவதானிக்கிறீர்களா?

  • தொள-தொளப்பாக அல்லது ஈரமாக இருத்தல் போடப்பட்டுள்ள கட்டு தொள-தொளப்பாக இருக்கும், அல்லது அல்லது கட்டு போடப்பட்டுள்ள இடத்தைச் சுற்றிக் கசிவு காணப்படும்.
  • வலி அல்லது சிவந்துபோன நிறம் அந்தப் பகுதியில் வலி இருக்கும், அல்லது சிவப்பாக, வீக்கமாகத் தோன்றும்.

இவற்றில் ஏதாவது உங்களுக்குத் தோன்றினால், உடனடியாக உங்கள் பராமரிப்பு அணியினரைத் தொடர்புகொள்ளுங்கள்.

உங்கள் சிறுநீர் வடிகுழாய்

இவற்றில் ஏதேனும் ஒன்றை நீங்கள் அவதானிக்கிறீர்களா?

  • நிறம் மாறியிருக்கும் சிறுநீர் மங்கலாகவோ, கரு-மஞ்சள் நிறமாகவோ, இரத்தம் கலந்தோ காணப்படும்.
  • சிறுநீர் வடிவு இல்லாமை 2 மணி நேரத்திற்கும் மேலாக சிறுநீர் ஏதும் வடிந்து பையில் சேர்ந்திருக்காது.
  • பையின் நிலை பை உங்கள் சிறுநீர்ப்பையை விட உயரத்தில் இருக்கும், அல்லது தரையைத் தொட்டுக்கொண்டிருக்கும்.
  • வலி அல்லது சிவந்த நிறம் இடத்தில் வலி இருக்கும், சிவப்பாக, அல்லது வீக்கமாகத் தோன்றும்.

இவற்றில் ஏதாவது உங்களுக்குத் தோன்றினால், உடனடியாக உங்கள் பராமரிப்பு அணியினரைத் தொடர்புகொள்ளுங்கள்.

உங்கள் கட்டு

இவற்றில் ஏதேனும் ஒன்றை நீங்கள் அவதானிக்கிறீர்களா?

  • தொள-தொளப்பு அல்லது ஈரம் கட்டுகள் தொள-தொளப்பாகவோ, விளிம்புகளின் அடியில் இருந்து திரவக் கசிவோ இருக்கும்.
  • வலி அல்லது சிவந்த நிறம் கட்டைச் சுற்றியுள்ள தோலில் வலி இருக்கும், சிவப்பாக அல்லது வீக்கமாக இருக்கும்.

இவற்றில் ஏதாவது உங்களுக்குத் தோன்றினால், உடனடியாக உங்கள் பராமரிப்பு அணியினரைத் தொடர்புகொள்ளுங்கள்.

நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்

உங்களுக்கு எது இருந்தாலும், இவற்றை அவதானியுங்கள்.

இவற்றில் ஏதேனும் ஒன்றை நீங்கள் அவதானிக்கிறீர்களா?

  • காய்ச்சல் அல்லது குளிர்ச்சுரம் உங்களுக்குக் காய்ச்சல், வியர்த்தல் அல்லது திடீரென ஏற்படும் குளிர் ஆகியன இருக்கும்.
  • குழப்பம் அல்லது கிறக்கம் குழப்பமாக, தலைச் சுற்றலாக அல்லது அசாதாரணமாக இருப்பது போல இருக்கும்.

இவற்றில் ஏதாவது உங்களுக்குத் தோன்றினால், உடனடியாக உங்கள் பராமரிப்பு அணியினரைத் தொடர்புகொள்ளுங்கள்.

இன்று பல் துலக்கினீர்களா?

நியூமோனியா வராமல் தடுக்க நீங்கள் செய்யக்கூடிய மிகச் சிறந்த விடயம் பல் துலக்குவதே. மருத்துவமனையில் இருக்கும் ஒவ்வொரு நோயாளருக்கும் நியூமோனியா ஏற்படும் ஆபத்து உண்மையாகவே உள்ளது. இதைத் தடுப்பது உங்கள் கையிலேயே உள்ளது.

காலையிலும் இரவிலும், நாளுக்கு இரண்டு முறை பல் துலக்குங்கள்.

பற்தூரிகை வேண்டுமா, அல்லது பல் துலக்க உதவி தேவையா? உங்கள் செவிலியிடம் கேளுங்கள்.

பல் துலக்க நினைவூட்டல்களை அமையுங்கள்

“Hey Siri” அல்லது “Hey Google” என்று சொல்லி, பின்னர்:

“ஒவ்வொரு நாளும் காலை 8 மணிக்குப் பல் துலக்க எனக்கு நினைவூட்டு.”

பின்னர் இரவு 8 மணிக்கும் அதையே மீண்டும் சொல்லுங்கள்.

உங்கள் தொலைபேசிக்கு இது புரியவில்லை என்றால், ஆங்கிலத்தில் இப்படிச் சொல்லுங்கள்:

“Remind me every day at 8 am to brush my teeth.”

அல்லது உங்கள் தொலைபேசியின் கடிகாரம் (Clock) செயலியில் தினசரி அலாரத்தை நீங்களே அமையுங்கள்.

நீங்கள் உறுதியாக நிற்க முடிகிறதா?

மருத்துவமனையில் உள்ள ஒவ்வொரு நோயாளிக்கும் கீழே விழுவது உண்மையான ஆபத்து. மருந்துகள், நோய், குழாய்கள், பழக்கமில்லாத அறை ஆகியவை உங்களைத் தடுமாறச் செய்யலாம். இதைத் தடுக்க நீங்கள் உதவலாம்.

  • உங்களுக்கு அப்படிச் சொல்லப்பட்டிருந்தால், அல்லது தலைச்சுற்றல் அல்லது பலவீனமாக உணர்ந்தால், எழுவதற்கு முன் உங்கள் செவிலியை அழையுங்கள்.
  • கழிவறைக்கு அவசரமாகச் செல்லாதீர்கள். முன்கூட்டியே உதவி கேளுங்கள்.
  • வழுக்காத காலணிகளை அணியுங்கள், உங்கள் கண்ணாடியையும் அழைப்பு மணியையும் கைக்கு எட்டும் இடத்தில் வையுங்கள்.

தனியாக எழலாமா என்று உறுதியில்லையா? உங்கள் செவிலியிடம் கேளுங்கள்.

தினமும் சரிபாருங்கள்

நாளுக்கு ஒரு முறையாவது உங்கள் IV குழாய், வடிகுழாய் அல்லது கட்டைப் பார்த்து, எச்சரிக்கை அறிகுறிகளை மீண்டும் ஒருமுறை சரிபாருங்கள்.

தினசரி நினைவூட்டலை அமையுங்கள்

“Hey Siri” அல்லது “Hey Google” என்று சொல்லி, பின்னர்:

“ஒவ்வொரு நாளும் காலை 9 மணிக்கு எச்சரிக்கை அறிகுறிகளைச் சரிபார்க்க எனக்கு நினைவூட்டு.”

உங்கள் தொலைபேசிக்கு இது புரியவில்லை என்றால், ஆங்கிலத்தில் இப்படிச் சொல்லுங்கள்:

“Remind me every day at 9 am to check for warning signs.”

அல்லது உங்கள் தொலைபேசியின் கடிகாரம் (Clock) செயலியில் தினசரி அலாரத்தை நீங்களே அமையுங்கள்.

வீட்டுக்கும் வைத்துக்கொள்ளுங்கள்

இந்தப் பக்கத்தை மீண்டும் பார்க்க, இதை உங்கள் தொலைபேசியில் சேமித்துக்கொள்ளுங்கள்.

உங்கள் பராமரிப்பு அணியினரைத் தொடர்புகொள்ளுங்கள்

மருத்துவமனையில் இருக்கிறீர்களா?

அழைப்பு மணியை அழுத்துங்கள், அல்லது உங்கள் செவிலியிடம் சொல்லுங்கள்.

ஆலோசனைக்கு அழையுங்கள்

உங்கள் மருத்துவமனை, ‘க்ளினிக்’ அல்லது மருத்துவரை அழையுங்கள். அவர்கள் உங்களுக்குத் தந்த இலக்கத்தைப் பயன்படுத்துங்கள்.

யாரும் பதிலளிக்காவிட்டால், அவசியமானதும் பொருத்தமானதும் என நீங்கள் கருதினால், உங்கள் பகுதிக்கான சுகாதாரச் சேவையை அல்லது அவசர இலக்கத்தைத் தொடர்புகொள்வது பற்றிச் சிந்திக்கலாம்.

முக்கியத் தகவல்

வழிகாட்டல்களை மட்டுமே ‘டைமர்-டேக்’ (Timertag) பக்கங்கள் உங்களுக்குத் தருகின்றன, ஆகவே உங்களுடைய சுகாதாரப் பராமரிப்பு அணியினர் அளிக்கும் அறிவுரைக்கு மாற்றாக இது அமையாது. உங்களுடைய சிகிச்சைக்கு உங்களுடைய ‘க்ளினிக்’ அல்லது மருத்துவமனையே தொடர்ந்து பொறுப்பாக இருக்கும். உங்களுக்கு சுகவீனமாக இருப்பது போல இருந்தால் உங்களுடைய செவிலி அல்லது மருத்துவருடன் உடனடியாகத் தொடர்புகொள்ளுங்கள்.

உங்களது அந்தரங்கத்தன்மை

நபர் ஒருவரைப் பற்றிய தகவல்களையோ, சுகாதாரப் பதிவுகளையோ ‘டைமர்-டேக்’ திரட்டுவதில்லை. பின்-தொடரல், பகுப்பாய்வுகள் அல்லது நீங்கள் ஏற்படுத்திக்கொள்ள வேண்டிய கணக்குகள் ஆகிய எதுவும் இருக்காது.

Free from Timertag · timertag.com